×

கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரையில் வெடிகுண்டுகள் பதுக்கலா?: மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை

ராதாபுரம்: கூத்தங்குழி கடற்கரையில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா? என்று மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குழி கிராம மீனவர்கள் இரு கோஷ்டியாக செயல்பட்டு வருவதால் அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலில் 2 பேர் இறந்தனர். இதையடுத்து சுனாமி காலனியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழப்பு செய்தனர்.

இந்நிலையில் கூத்தங்குழியில் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடங்குளம் போலீசார் கூத்தங்குழி பாத்திமா நகர், சுனாமி நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளனவா? என்று மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து காலை 6 மணி முதல் 9 மணி வரை சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு உள்ளிட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

The post கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரையில் வெடிகுண்டுகள் பதுக்கலா?: மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Koothangulam Beach ,Kedangulam ,Mopanai Radhapuram ,Koothangulam ,Paddy District ,Needangulam ,Sootham Beach ,Natangkulam ,Mopanai ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய கடற்கரை...